தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நம்ப வேண்டாம் - வெங்கய்யா நாயுடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு தவறாக முடிந்துள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நம்ப வேண்டாம் - வெங்கய்யா நாயுடு
x
ஆந்திரா மாநிலம் குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இவ்வாறு கூறிய அவர், மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் முடிந்த நிலையில், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அறிவித்த நிலையில் இவ்வாறு கூறினார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல என்றார். அண்மைக் காலமாக, அரசியல் நாகரீகம் குறைந்து வருவது கவலையளிப்பதாகவும்,  அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளதாகவும் கூறிய அவர்,  தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகவும், அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே என்றும் அவர் பேசினார். இந்த அடிப்படை நாகரீகத்தை மறந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் நடந்து கொள்வதாக கூறிய வெங்கய்யா நாயுடு,  நாட்டுக்கும், மாநிலத்துக்கும் திறன் மிக்க தலைவரும், நிலையான அரசும் அவசியம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்