சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து - கமல் சர்ச்சை பேச்சு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர பிரசாரம் செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பள்ளபட்டியில் உள்ள அண்ணா சிலை முன்பு பேசிய கமல்ஹாசன், காந்தியின் கொள்ளுப் பேரன் தாம் என்றும். அவரை சுட்டுக்கொலை செய்ததற்கு பின்னணி கேட்டு வந்திருப்பதாகவும் காட்டமாக பேசினார். தீயாக பரவிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே 2000 ஆவது ஆண்டில் வெளியான கமல்ஹாசனின் ஹேராம் படத்தில், கமல்ஹாசன் கோட்சேவின் கொள்கையை ஆதரிப்பவராக நடித்திருந்தார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று, கமல்ஹசான் பேசியுள்ளது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது அரவக்குறிச்சி பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை மீண்டும் மீண்டும் கமல்ஹாசன் பதிவு செய்து வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்க்கும் இந்தியா தேசியக் கொடியை போன்று இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காந்தி இறப்புச் சம்பவம் குறித்து ஹேராம் படத்துக்கு பிறகு கமல்ஹாசன் அடித்துள்ள டார்ச் லைட் வெளிச்சம், என்ன பிரதிபலிப்பை தரும் என்பதை காலம்தான் சொல்லும்.
Next Story