நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸ் கட்சி தைரியமாக முடிவு எடுக்கப்படவில்லை - பிரதமர் மோடி
தேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி தைரியமாக எந்த முடிவையும் உடனுக்குடன் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், ரட்லாம், பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தமது வாக்கை செலுத்தாதற்கு, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என புகார் கூறினார். பின்னர், ஹிமாச்சல பிரதேசம், சோலான் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி எடுத்த, முடிவுகளால் தேசம், நஷ்டத்தை சந்தித்ததாக குற்றஞ்சாட்டினார். நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில், காங்கிரஸ் அரசு, தைரியமாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக, பிரதமர் மோடி புகார் தெரிவித்தார்.
Next Story