"மோசடிகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது" - ஸ்டாலின்
ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கடமைகளிலிருந்து தப்பிக்க பார்க்கும் தமிழக அரசு, தேர்தல் ஆணையத்தை தனது முறைகேடுகளுக்கு உடந்தையாக்கி கொள்ளப் பார்க்கிறது என தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது எனவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் என்ன தந்திரங்கள் செய்தாலும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களின் தண்ணீர் தாகத்தை போக்க தமிழக அரசு தவறிவிட்டதாகவும் உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடப்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story