சத்யபிரதா சாகுவிடம் திமுக சார்பில் மனு : திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் நேரில் சந்திப்பு
13 வாக்குசாவடிகளில் நடத்தப்பட இருக்கும் மறுவாக்கு பதிவை நேர்மையான முறையில் நடத்த வலியுறுத்தி, திமுக சார்பில் அக்கட்சியின் சட்டதுறை செயலாளர் கிரிராஜன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
13 வாக்குசாவடிகளில் நடத்தப்பட இருக்கும் மறுவாக்கு பதிவை நேர்மையான முறையில் நடத்த வலியுறுத்தி, திமுக சார்பில் அக்கட்சியின் சட்டதுறை செயலாளர் கிரிராஜன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு பதிவை Web casting செய்வது மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பார்வையாளர்கள், கூடுதல் ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள 8 வாக்குசாவடியில் தலித் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Next Story