கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கைரேகை வைத்த விவகாரத்தில், தவறு நடந்ததை அ.தி.மு.க.வினர் ஒப்புக்கொண்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கைரேகை வைத்த விவகாரத்தில், தவறு நடந்ததை அ.தி.மு.க.வினர் ஒப்புக்கொண்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய அவர், கடந்த முறை நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மறைந்த வேட்பாளர் ஏ.கே. போஸின் வெற்றியும், நடைபெற்ற தேர்தலும் செல்லாது என தீர்ப்பு வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். கைரேகை வைக்கும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என்று தீர்ப்பில் உள்ளதாக கூறிய ஸ்டாலின், அதை கண்டுபிடித்த தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு, வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க. தலைமை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், விளாச்சேரி பகுதியிலும், ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Next Story