3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீசில் இருப்பது என்ன...?
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் பதில் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக கொறடா அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல்.ஏக்களுக்கும், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 185 பக்கங்கள் கொண்ட இந்த நோட்டீசில், தினகரனுடன் இணைந்து பிரசாரம் செய்ததாக 4 படங்கள் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்களும் நோட்டீசில் உள்ளன. இதேபோன்ற பல்வேறு வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நோட்டீசில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் பதில் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Next Story