அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்...

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இரவு மதுரை வந்தடைந்தார்.
அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்...
x
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் ராமதாதபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வகையில், பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி  ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  

பிரதமர் மோடி வருகை... கண்காணிப்பு தீவிரம்...



பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமநாதபுரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்கு தளம், போக்குவரத்து வழித்தடம், மீனவ பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீ்ச்சில் நடைபெற்று வருகிறது. 
 



Next Story

மேலும் செய்திகள்