காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - ராகுல்காந்தி
விவசாயிகளின் மனதில் உள்ள அச்சத்தை போக்க, வேளாண் கடன் வசூல் சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், ஒசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சத்யா, தருமபுரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டுவருவார்கள், ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும், விவசாயிகளின் அச்சத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி உறுதி அளித்தார். காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல்காந்தி உறுதியளித்தார்.
Next Story