8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செல்வதை தடுக்க முடியுமா..? பா.ம.க.வுக்கு ஸ்டாலின் சவால்

8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அ.தி.மு.க. அரசை நிர்பந்திக்க பா.ம.க.வால் முடியுமா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
x
தர்மபுரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமார் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணி ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், இன்று தர்மபுரி மாவட்டம் ராணியம்பட்டியில் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், இந்த தேர்தல், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்கு கிடைத்த வாய்ப்பு என்று தெரிவித்தார். மேலும், 8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அ.தி.மு.க. அரசை நிர்பந்திக்க பா.ம.க.வால் முடியுமா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்