"வாக்கு வங்கிக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம்" - பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
வாக்கு வங்கி அரசியலுக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில் பேசி பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது என்றார். தொடர்ந்து பேசிய அவர், நம் நாடு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும் என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் பிரதமர் மோடி புகார் கூறினார். வாக்கு வங்கி அரசியலுக்காக, நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என்றும், பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், நடுத்தர மக்களுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை என்றும், காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வாக்களித்தால் மக்கள் மீதான வரி அதிகரிக்கும் என்றும், அவர் குற்றஞ்சாட்டினார்.
Next Story