பூஜ்ஜியத்துக்கு உள்ளே ராஜ்ஜியத்தை ஆள்வது யார்...? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி
அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி அருகே உள்ள பறக்கை பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பதாகக் கூறினார். எட்டு வழிச் சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சிந்தித்து முடிவு எடுக்கும் என்று குறிப்பிட்ட பொன் ராதாகிருஷ்ணன், மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் மிகுந்த அக்கறையோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
Next Story