மத்தியபிரதேச முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி வீட்டில் சோதனை

அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி ஆய்வு
மத்தியபிரதேச முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி வீட்டில் சோதனை
x
மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத்திடம்  சிறப்பு அதிகாரியாக பணிபுரியும்   பிரவீன் கக்காரின் வீடு இந்தூரில் உள்ளது.அங்கு இன்று அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.டெல்லியியிலிருந்து சென்றுள்ள 15 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வீடு தவிர பிரவீன் கக்காருக்கு சொந்தமான 6 இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.இதில் 9 கோடி ரூபாய் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,  ஹவாலா பண விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுபோல, கமல்நாத்தின் உதவியாளர் ஆர்.கே.மிக்லானிக்கு சொந்தாக டெல்லியில் உள்ள வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.டெல்லி கிரீன்பார்க் பகுதியில் உள்ள வீட்டில் அதிகாலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்