காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...
காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திருநாவுக்கரசர் பேசியதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வங்கியில் உள்ள பணத்தை கோடீஸ்வரர்கள் கொள்ளயடித்துவிட்டு வட நாட்டிற்கு ஓடிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். பின்னர், சுதாரித்துக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடி விட்டார்கள் என தடுமாற்றுடன் கூறினார். திருநாவுக்கரசரின் பேச்சை கேட்ட கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.
Next Story