"அடுக்கு மொழி பேச்சை தன்னிடம் எதிர்பார்க்காதீர்கள்" - கமல்ஹாசன்

மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து கமல் பிரசாரம்
அடுக்கு மொழி பேச்சை தன்னிடம் எதிர்பார்க்காதீர்கள் - கமல்ஹாசன்
x
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கமீலா நாசரை ஆதரித்து  கோயம்பேடு, வில்லிவாக்கம், அயனாவரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், மக்கள் மாறி விட்டார்கள் என்றும், அரசியலில் மாற்றம் வருவதுதான் பாக்கி என்றும் தெரிவித்தார். அடுக்கு மொழி பேச்சை தன்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற அவர், தாங்கள் வேலைக்காரர்கள் என்று குறிப்பிட்டார். குடிநீர் வீட்டிற்கு பைப்புகளில் வரவேண்டும் என்ற கமல், காசு கொடுத்து அதனை வாங்கக்கூடாது. இது எங்கள் ஐந்தாண்டு திட்டம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்