அமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் தள்ளுமுள்ளு

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம்
அமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் தள்ளுமுள்ளு
x
பவானி அருகே, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய  சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் நிகழ்ச்சியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி  அம்மாபேட்டை பகுதிகளில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன்,  அதிமுக வேட்பாளர்  ஆனந்துக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது  அமைச்சரை வரவேற்கும் விதமாக ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அந்த பெண்களுக்கு அமைச்சரின் உதவியாளர் பணம் வழங்கியதால், அவற்றை வாங்குவதற்கு பெண்கள் ஒருவரை ஒருவர் முந்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்