20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்
x
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பான சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . 

நாளை   திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அங்கு, பொதுக் கூட்டத்தில் பேசும் அவர், தஞ்சை திலகர் திடல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 21ம் தேதியன்று பெரம்பலூர் மற்றும் 22ல் சேலம் பகுதிகளில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், தருமபுரியில் உள்ள ஒடசல்பட்டி பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

23ம் தேதி அரூர் மற்றும் திருவண்ணாமலை பொதுக் கூட்டங்களில் பேசும் ஸ்டாலின்,  24ம் தேதி வட சென்னை, 25ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளிலும் ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்கிறார். இதுபோல, 26ல் திண்டுக்கல், நிலக்கோட்டை, 27ல் தேனி, ஆண்டிப்பட்டி, 28ம் தேதி மதுரை, விருதுநகர், சாத்தூர்  29ல் சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 

30ம் தேதியன்று கிருஷ்ணகிரி, ஓசூரில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், 31ம் தேதியன்று வேலூரிலும், ஏப்ரல் 1ம் தேதி அரக்கோணம் மற்றும் தென்சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். ஏப்ரல் 2ல், நீலகிரி, 3ம் தேதி திருப்பூர், கோவையில் பிரசாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின், 4ம் பொள்ளாச்சி, ஈரோட்டில் பயணம் செய்கிறார்.  

ஏப்ரல் 5ம் தேதி கரூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் சுற்றுப் பயணம் செய்யும் ஸ்டாலின், 6ம் தேதி விழுப்புரம் மற்றும் ஆரணியிலும் வாக்கு சேகரிக்க உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்