மகாராஷ்டிரா, ஹரியானாவுக்கு முன்கூட்டியே தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி, 12ம் தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
நாடாளுமன்ற தேர்தலோடு மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடத்த அந்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த மாநிலங்களின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளதால், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இந்த வாரத்தில் இருக்காது எனவும் அடுத்த வாரம் 12ம் தேதி செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துமாறு பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், அந்த கட்சி ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது.
Next Story