ரபேல் விவகாரம் - ராகுல் காந்தி கேள்வி
ரபேல் தொடர்பான ஆவணங்கள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரபேல் தொடர்பான ஆவணங்கள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்றால் மத்திய அரசு ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார். 30 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். ரபேல் ஆவணங்கள் திருட்டு என தவறான தகவல் பரப்பபட்டு வருவதாகவும், இதன் மூலம் அந்த ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதியாகி உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சரியான திசையில் செல்வதாகவும், அவர் தெரிவித்தார்.
Next Story