வருகிற 6 - ந்தேதி திமுக தென் மண்டல மாநாடு - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
விருதுநகரில் வருகிற 6 ஆம் தேதி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க திமுகவினருக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகரில் வருகிற 6 ஆம் தேதி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க திமுகவினருக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாய்நாட்டு மக்களை ஏமாளிகளாக்காமல் காத்திட, இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு விருதுநகரில் தென் மண்டல மாநாடு நடைபெற்றதாகவும், அதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதே வரலாறு இந்த மக்களவைத் தேர்தலிலும் உறுதியாகத் திரும்பும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story