இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்

இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட  அ.தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், இங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகும் என்றும், வரும் ஆறாம் தேதி முழு கூட்டணி விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி கள அளவில், சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை என்றும், கூட்டணிக்கு யாருமே அழைக்காத நிலையில், தினகரன் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்