சரியான நேரத்தில் தக்க பதிலடி - கமல்ஹாசன்
இந்திய விமானப்படையின் தெளிவான, துல்லிய தாக்குதல் பெருமைப்படுத்தும் விதமாக இருந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத்-தை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் தந்தி டிவி.க்கு அவர் சிறப்பு பேட்டியில், இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்று கூறினார். பாகிஸ்தான் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு, சுயமரியாதை உள்ள பெரிய நாடு செய்யவேண்டியதை செய்துள்ளதாக கருத்து தெரிவித்தார். இந்திய விமானப்படையின் தெளிவான, துல்லிய தாக்குதல் பெருமைப்படுத்தும் விதமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
Next Story