வாழ்த்து தெரிவித்த ரஜினி - சூசகமாக ஆதரவு கோரிய கமல்...

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டுவிட்டர் வழியாக சூசகமாக ரஜினியிடம் ஆதரவு கோரியுள்ளார்.
x
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் நீதிமய்யத்திற்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசன், பொதுவாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துகள் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மறைமுகமாக ரஜினியின் ஆதரவை கோரியுள்ளார். என் 40 ஆண்டு கால நண்பரே நல்லவர் துணை நின்றால் நாற்பதும் எளிதே நாளை நமதே என அவர் கூறி இருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்