தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் - கமல்ஹாசன்
தமிழகத்திற்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரபரப்பாக பேசியுள்ளார்.
திருவாரூரில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கமல், அரசியலில் நாங்கள் காப்பி அடிக்கவில்லை என்றும் மக்கள் நலன் மட்டுமே தங்களது கொள்கை என்றும் கூறினார். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என தெரிவித்த கமல், அதற்கான நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மக்கள் நலனுக்கு குறுக்கே நிற்கும் டெல்லிக்கு நாம் போக வேண்டும் என்றும் அதற்கான வாய்ப்பு தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் எனவும் கமல்ஹாசன் கூறினார்.
Next Story