முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் கடந்த 1998 -ம் ஆண்டு நடந்த போராட்டத்தில், அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது அமைச்சர் பதவி பறிபோனது. இதற்கிடையே, தான் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும் கோரி, பாலகிருஷ்ண ரெட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது. மேலும், 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
Next Story