நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - நடிகர் ரஜினிகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - நடிகர் ரஜினிகாந்த்
x
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் , தமிழக சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தம்முடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தம்முடைய படத்தையோ, மன்றத்தின் கொடியையோ எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்கோ யாரும் பயன்படுத்த கூடாது என்று ரஜினி தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழகத்தின்  தண்ணீர்  பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்க கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு மக்கள் சிந்தித்து வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
 

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : ஷியாம் கருத்து 


நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : வைகைச் செல்வன் கருத்து


நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : ரமேஷ் கருத்து 



நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : ரவீந்திரன் துரைசாமி கருத்து 


நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : அர்ஜுன் சம்பத் கருத்து


நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : கே.டி .ராகவன் கருத்து 



நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : ஹெச்.ராஜா கருத்து


நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியில்லை : விஜயதாரணி கருத்து



Next Story

மேலும் செய்திகள்