தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை விமர்சித்து அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியது சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.
தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்
x
* பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, ஜி.எஸ்.டியால் சிறுகுறு தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக  நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். 

* மேலும் மத்திய அரசை விமர்சித்த தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது அதிமுகவின் கருத்தா என்பதை விளக்க வேண்டும் எனவும் பொன்முடி கேள்வி எழுப்பினார். 

* அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜி.எஸ்.டி.யில் திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று பேசிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றார்.

* அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தா என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.

* அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு எதிராக வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசின் கடமை என்றார். மேலும் தம்பிதுரை பேசியதில் தவறு என்ன இருக்கிறது என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்