"நாடாளுமன்ற தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்ற தேர்தலுடன், 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்
x
நாடாளுமன்ற தேர்தலுடன், 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக கடந்த 2017 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாகவும், தேர்தல் நடத்த ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார். இரு தேர்தலையும் ஒன்றாக நடத்தினால், வாக்காளர்களுக்கு வசதியாக இருக்கும் எனவும், தேர்தல் செலவு தவிர்க்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை, கனிமொழி  தலைமையில், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்