கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா முயற்சி - முதல்வர் குமாரசாமி ரிலீஸ் செய்த ஆடியோ
கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவது தொடர்பாக எடியூரப்பா பேசியதாக கூறி முதல்வர் குமாரசாமி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி மற்றும் துணைமுதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, மூத்த அரசியல்வாதியான எடியூரப்பா, கடந்த சில நாட்களாக கீழ்தரமான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியை எடியூரப்பா மேற்கொண்டு வருவதாக கூறி, ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரை 50 கோடி ரூபாய்க்கு விலை பேசியது பதிவாகி உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை கிடையாது என்றும், அதனை ஆதாரத்துடன் நிரூபித்தால் தமது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறினார்.
Next Story