பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள்

தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...
பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள்
x
* 1989-ம் ஆண்டு, ராமதாஸால் துவக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளாக அறிவித்தது.

* துவங்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே, 1989 நாடாளுமன்ற தேர்தலை பா.ம.க. எதிர்கொண்டது. அந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

* அதன் பின்னர், 1991 சட்டப்பேரவை தேர்தலில் பா.ம.க. 5.9 சதவீத வாக்குகள் பெற்று, ஓரு இடத்தில் வெற்றி பெற்றது.

* 1996 சட்டப்பேரவை தேர்தலில், திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பா.ம.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது.

* 1998 நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து 6 சதவீத வாக்குகள் பெற்று, 4 இடங்களில் பா.ம.க. வெற்றி பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் இடமும் பிடித்தது.

* 1999 நாடாளுமன்ற தேர்தலில் 8.2 சதவீத வாக்குகள் பெற்று 5 இடங்களை வென்று, வாஜ்பாய் அரசில் இரண்டு துறைகளை பெற்றது, பா.மக.

* 2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 5.6 சதவீத வாக்குகளை பெற்று 20 இடங்களில் வெற்றி பெற்றது.

* 2004 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேர்ந்து, 6.7 சதவீத வாக்குகள் பெற்று 5 இடங்களில் வெற்றி பெற்றது. 

* 2004 ம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் தேர்வான அன்புமணி, மன்மோகன் சிங் அமைச்சரவையில், சுகாதார துறை அமைச்சராக 5 ஆண்டுகள் செயல்பட்டார்.

* 2006ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 5.7 சதவீத வாக்குகள் பெற்று 18 இடங்களில் வென்றது. 

* 2009 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 6.4 சதவீத வாக்குகள் பெற்றும், ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.

* 2011 சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்து, 5.2 சதவீத வாக்குகள் பெற்று, 3 இடங்களில் வெற்றி பெற்றது.

* 2014 நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பா.ஜ,க அணிக்கு மாறிய பா.ம.க, 4.4 சதவீத வாக்குகள் பெற்று தர்மபுரியில் மட்டும் வெற்றி பெற்றது. அன்புமணி எம்.பி.யானார். 

* 2016 சட்டப்பேரவை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 5.3 சதவீத  வாக்குகள் பெற்று, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்த நின்ற பாமக தற்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்