நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் 6 குழுக்களை அமைத்தார் ராகுல்...

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக காங்கிரஸில் 6 குழுக்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் 6 குழுக்களை அமைத்தார் ராகுல்...
x
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக காங்கிரஸில் 6 குழுக்களை , அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்தல் குழுவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் 14-க்கும் அதிகமானோர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருநாவுக்கரசர் தலைமையில் 35 பேர் கொண்ட பிரசார குழுவும், தங்கபாலு தலைமையில் 36 பேர் கொண்ட விளம்பர குழுவும், பீட்டர் அல்ஃபோன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கே.ஆர். ராமசாமி தலைமையில் 6 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக காங்கிரஸின் செயல் தலைவராக மோகன் குமாரமங்கலத்தை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்