மோடி ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டம் இது - மம்தா பானர்ஜி
மோடி ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டம் இது - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டம் இது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர் , இது அரசியல் விழா அல்ல, எனினும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். அப்போது அரசியல் அமைப்பு காக்கப்படும் வரை தன்னுடைய போராட்டம் தொடரும் என்றும் கூறினார். பிரதமரின் உத்தரவை பின்பற்றி, அரசியல் எதிரிகளை பழிவாங்கும் விதமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சி.பி.ஐ.யை ஏவுவதாக அப்போது அவர் குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா தர்ணா
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொல்கத்தா ரயில் நிலையம் முன்பு நேற்றிரவு தொடங்கிய இந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. போராட்டத்தில் இருந்தபடியே மம்தா பானர்ஜி, முதலமைச்சர் பணிகளை கவனித்து வருகிறார்.
Next Story