"காங்கிரஸின் கொள்கைகளுக்காக அயராது பாடுபடுவேன்" - கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
x
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரியும், செயல் தலைவர்களாக, ஹெச். வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே. விஷ்ணுபிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக செயலாற்றிய திருநாவுக்கரசருக்கு, அந்த செய்திக்குறிப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கே.எஸ். அழகிரி 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் - கடலூர் தொகுதியில் இருந்து 1999-ல் எம்.பி.யானவர்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை பூர்வீகமாக கொண்டவர். 1986ஆம் ஆண்டில் கீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 1991 மற்றும் 1996 சட்டப் பேரவை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் த.மா.கா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்