6,000 கி.மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்க திட்டம் - மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தகவல்
வரும் நிதியாண்டில் ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்க திட்டமிட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்க திட்டமிட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில், சர்வதேச எரிசக்தி முகமையின் ஆய்வறிக்கை வெளியிட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு 600 கிலோ மிட்டர் மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு மட்டும் நான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். எல்.இ.டி. பல்புகளில் 14 ஆயிரம் கோடி முதலீடு செய்த நிலையில், ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் செலவு குறைவது மூலம் வருவாய் கிடைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Next Story