"2-வது உலக முதலீட்டாளர் மாநாடு மாயமான் காட்சி" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

"அரசு செலவில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார மாநாடு"
x
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான் காட்சி  என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசின் செலவில் நடத்தி, அதை  அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். டாவோஸில் உலக பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகின்ற நேரத்தில், சர்வதேச முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தும், இங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படடிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசின் செலவில் நடத்தி, அதை  அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியிருப்பதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளை பெறும் வகையில், பத்து லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

* கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற  முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முடிவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் பழங்கதையாய் கானல் நீராகி மறைந்து போனதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

* அரசின் பணத்தை வீணடித்ததுதான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை என்று குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் 

* டாவோஸில் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகின்ற நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தும், சென்னையில் நடத்தப்பட்ட   உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஒரு "மாயமான் காட்சி" என்பது மட்டுமே உண்மை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்