"அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டி.டி.வி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
டி.டி.வி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நேரில் 
ஆஜராகி பதில் அளித்தார். அப்போது, பதிவு செய்யாத ஒரு அமைப்புக்கு 
ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும், அதன்படி அ.ம.மு.கவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் விளக்கம் அளித்தார். இதனிடையே, தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், வாதாடும் போது, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு 6 உறுப்பினர்கள் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்