விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

அந்நிய நாடுகளால் அல்ல, ஆளும் ஆட்சியாளர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில், 'தேசம் காப்போம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் வீரமணி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் , ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர்.

ஸ்டாலின், திமுக தலைவர்

"நம் நாட்டிற்கு அந்நிய நாடுகளால் ஆபத்து இல்லை"
" நாட்டை ஆள்பவர்களால் தான் ஆபத்து"
"பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால்..."
"அந்த பட்டத்தை பெருமையோடு பெற்றுக்கொள்வோம்"
"உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் இழைத்து விட்டார்"
"மற்ற மாநிலத்தில் மோடியை வீழ்த்தும் வேலை மட்டும் தான்"
 "தமிழகத்தில் அ.தி.மு.க அரசையும் சேர்த்து வீழ்த்த வேண்டும்"

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

"மோடியும், அமித்ஷாவும் அரசியல் தலைவர்களை பழிவாங்குகிறார்கள்"
"அரசு நிறுவனங்களை வைத்து கொண்டு மிரட்டுகிறார்கள்"

வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

"மோடி மீண்டும் பிரதமராக முடியாது"
"மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள்"

திருநாவுக்கரசர், தலைவர், தமிழக காங்.

"மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை"
"மத்திய அரசின் நிறுவனங்களை அழித்துவிட்டார்" 

திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்

"அனைத்து சமூகத்தினரும் ஒரே இடத்தில் வாழ..."
"சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி"
"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்"

கி.வீரமணி, தலைவர்,  திராவிடர் கழகம்

"10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்"
"எதிர்க்கட்சிகள் சிறிது பின்வாங்கியதால்  சட்டம் நிறைவேறியது"
"இருந்தாலும் இந்த சட்டம்  நீதிமன்றத்தில் நிற்காது"



Next Story

மேலும் செய்திகள்