"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
x
தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துவரும்,  மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, புதுச்சேரியில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்றார். மேலும், தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்