கிராமங்களில் இருந்து தான் அரசியல் தொடங்குகிறது - ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் ஈசநத்தம் கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார். ஊராட்சிகளின் மேம்பாட்டுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Next Story