10 % இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய திமுக வழக்கு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
x
திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அளவில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்போது, இடஒதுக்கீடு அளவு 79 சதவீதமாகி விடும். இது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என்றும் இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையாக எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்கவும், சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரியும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு திங்கள்கிழமை அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்