"2014க்கு பிறகு தீவிரவாத தாக்குதல் இல்லை" - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
ஐந்து ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி விளங்குவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, அக்கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒவ்வொரு நாளும் ஒரு முடிவு எடுத்து வளர்ச்சிப் பெற்ற நாடாக இந்தியாவை பாஜக அரசு, மாற்றிக்காட்டி உள்ளதாக கூறினார்.
மேலும் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் பெரிய தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க, தீவிரவாதிகளுக்கு வாய்ப்பே வழங்கக்கூடாது என்பதில் மட்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக பேசிய மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நான்கரை ஆண்டுகளுக்குள்ளாகவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story