நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் -  ஸ்டாலின்
x
* தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம்இருக்கலாம் என ஏற்கனவே தாம் சொல்லியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

* திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, புயல் நிவாரண பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு, மக்களின் அதிருப்தி மற்றும் கோபம் அதிகமாகி, தேர்தலுக்கு எதிரான மனநிலை உருவாகும் எனவும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். 

* தேர்தல் வெற்றியைவிட, கஜா புயலால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மக்களுக்கு நிவாரண பணிகள் தடைபடக் கூடாது  என்பதே திமுக.வின் கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்

* அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இடைத் தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணைய முடிவை அனைவரும் வரவேற்பார்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

* நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து, 20 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்