தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது - தம்பிதுரை குற்றச்சாட்டு...
தமிழகத்துக்கான நிதியை அளிப்பதில் மத்திய அரசு பாராமுகமாக நடந்துகொள்வதாக நாடாளுமன்றத்தில் தம்பிதுரை குற்றச்சாட்டினார்.
இன்றைய கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் , மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, தமிழகத்துக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுகிறது. இதனால் தமிழகத்தின் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படுகிறன. மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்குவது கூட்டாச்சி முறைக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியவர், மத்திய அரசு அம்பானி, அதானி போன்றவர்களின் நலனுக்கான செயல்படுகிறது என்றும் ஏழை மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தம்பிதுரை குற்றச்சாட்டுக்கு ஜேட்லி விளக்கம்
தம்பிதுரையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதிக் குழு பரிந்துரை அடிப்படையிலேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்குகிறது என்றார். ஜிஎஸ்டி சட்டப்படி மாநிலங்களுக்கு 14 சதவீத வரி வருவாய் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இலக்கை எட்டாத மாநிலங்களுக்கான இழப்பீடு அளிப்பதற்கும் ஜிஎஸ்டியில் வழிசெய்யபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story