ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு : திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு...

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
x
தமிழக சட்டப்பேரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் பேசத் தொடங்கியபோது, தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அனுமதி தர கோரினார். தொடர்ந்து ஆளுநர் நிகழ்த்திய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி, மேகதாது பிரச்சினையில் மாநில அரசின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி, வெளிநடப்பு செய்ததாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமி கூறும்போது, கஜா புயல் நிவாரணம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நிலவும் மர்மம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிர்ச்சினைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததாகத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்