ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் விசாரணை பயனளிக்காது என்பதால் சிறப்பு குழு விசரிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
x
* ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் விசாரணை பயனளிக்காது என்பதால் சிறப்பு குழு விசரிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

* மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள், ஜெயலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்போதைய முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ-க்கள் யாரும் பார்க்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது,  ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டது யார்? . ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய விடாமல் தடுத்தது யார்? . முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணனை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி ஆணையத்தில் மனு. ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னுக்குப்பின் முரணான தகவல் தரும் அவர்களை விசாரிக்க வேண்டும்.

* ஜெயலலிதாவின் உயிரைவிட இந்திய மருத்துவத்தின் கவுரம் முக்கியமா?. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சொன்னதன் பின்னணி குறித்து விசாரணை தேவை. நாடே சந்தேகப்பட்டது போல் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை பயனளிக்காது என்பதால், சிறப்பு குழு விசாரணை தேவை. சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஜெயலிதாவின் மரணம் தொடர்பான உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்