"தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பங்கேற்க இயலாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
x
தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பங்கேற்க இயலாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த செயலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில், தற்போது லோக் ஆயுக்தா அமைப்பிற்கு ஊழல் புகார் மீது பொதுநலனுக்கு பயனுள்ள வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் அதிகாரமில்லை என குறிப்பிட்டுள்ளார். அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள் ஏதும் ஊழல் ஒழிப்பிற்கு உதவாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊழல்கள் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு வித்திடாமல், லோக் ஆயுக்தா அமைப்பு அதிமுக அரசின் கூண்டுகிளி போல் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். எந்தவிதத்திலும் இந்த குழு ஊழல் ஒழிப்புக்கு உதவாது என்பதால், நாளை நடைபெற உள்ள தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்