மு.க. ஸ்டாலின் "கிராம பிரசாரம்" திடீர் மாற்றம்
மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனதை வெல்வோம் என்ற 3 முழக்கங்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்மேற்கொள்ள இருந்த கிராம பிரசார பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
* தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2 ம் தேதி துவங்குவதால், ஊராட்சி சபை கூட்டம் ஜனவரி 8 ம் தேதி துவங்கும் என்று அறிக்கையொன்றில் திமுக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த பிரசார பயணம், பிப்ரவரி 17 ம் தேதி வரை நடைபெறும் என விளக்கம் அளித்துள்ளது.
* ஜனவரி 8 - ல் திருவாரூரில் மு.க. ஸ்டாலினும், ஈரோட்டில் துரைமுருகனும், காஞ்சியில் டி. ஆர். பாலுவும் ஊராட்சி சபை கூட்டங்களை துவக்கி வைப்பார்கள் என்று, திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story