பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்? - மு.க. ஸ்டாலின் விளக்கம்
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியின் பெயரை, திமுக முன் மொழிந்தது ஏன் என்பது குறித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ராகுல்காந்தி என அறிக்கையொன்றில் புகழாரம் சூட்டி உள்ள அவர், மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்ற தலைவர் என குறிப்பிட்டு உள்ளார். மத வெறியின் பிடியில் இருந்து நாடு விடுபட்டு, ஜனநாயகம் மலர வேண்டுமானால், ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயக படையினை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தும் வலுவான தலைமை என்ற அடிப்படையில், ராகுல்காந்தியை முன் மொழிந்ததாக தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story