"முதல்வன்" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்

ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
x
கஜா புயலால் கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலை காடு, மணக்காடு, மங்களம்கொம்பு, குரங்குகொம்பு, குரங்கணிபாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்களுக்கு தேவையான உடை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் பாதித்த பகுதிகளை அரசு அதிகாரிகள் பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

"முதல்வன்" சினிமா பாணியில் ஆக்‌ஷன்

முன்னதாக, ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "முதல்வன்" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல், இதுதொடர்பாக விசாரித்தார். அப்போது, தாங்கள் கவனித்துக் கொண்டு இருப்பதாகவும், பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுரை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்