"ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் இன்னும் மர்மம் நீடிக்கிறது" - நீதிபதிகள் கருத்து

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் 884 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் இன்னும் மர்மம் நீடிக்கிறது - நீதிபதிகள் கருத்து
x
* ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும், பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 

* இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

* இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் பதிவு செய்த வழக்கை தனி நீதிபதி, ரத்து செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 

* இதையடுத்து சோதனை நடத்தியதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனவும், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையை கண்காணித்து அறிக்கை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? எனவும் கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். 

* ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் இன்னும் மர்மம் நீடிக்கிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், 884 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை இன்னும் அடையாளம் 
கண்டுபிடிக்க முடியவில்லையா? என கேள்வி எழுப்பியதுடன், வருமான வரித்துறை, அப்போது பணியில் இருந்த இரு காவல் ஆணையர்கள், டிசம்பர் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்